Tuesday, March 12, 2013

உன்னை என் எதிரில்
பார்க்கவில்லை
என்றாலும்..!
உன்னை என்
வாழ் நாட்கள் முழுதும்
எதிர் பார்த்து இருப்பேன்
உன் அன்புக்காக..
உயிரில்லா மெளனங்களை விட
உன் உரிமைக் கோபங்களை
ரசிக்க பழகுகிறேன்
ஏனென்றால்..!
நீ எனக்கு மட்டுமே சொந்தம்
என்பதால்.
உன்னை அதிகமாய் நேசிப்பதால்
தான் என்னவோ
உன்னை அதிகமாய் வெறுப்பதாய்
நடித்துக் கொள்கிறேன்...

Sunday, May 27, 2012

பெண்களும்,சமூகமும்:
________________________
நீண்ட காலமாகவே சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமையும்,சமூக அந்தஸ்தும் மறுக்கப்பட்டு வந்தன.இருந்தாலும் பண்டையகாலத்தில் அடக்குமுறைகளையும் மீறி சில பெண்கள் சமுதாய மாற்றத்திற்கும்,சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தினார்கள்.அந்த காலத்தில் ஔவையார் போன்ற பெண்கவிஞர்களை கூற்லாம்.
பெண்களின் குணங்கள் நீரை போன்றவை.நீரை எதில் நிரப்பினாலும் அந்த உருவதிற்கு மாறுகிறதோ,அதே போல் பெண்கள் எந்த இடத்திலும் தன்னுடைய சகிப்பு தன்மையால் அந்த சூழ்நிலக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிகொள்வார்கள்.அதேபோல் மன உறுதியுலும்ஆண்களைவிட,பெண்களே உயர்ந்தவர்கள் என நான் கூறுவேன்.திருமண காலம் வரை த்ன்னுடைய தந்தை வீட்டில் இருந்துவிட்டு பிறகு தன்னுடைய கணவன் வீட்டிற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிகொள்வது சாதாரண விசயம் இல்லை என்றே நான் நினக்கிறேன்.மேலும் பத்துமாதம் ஒரு குழந்தையை கருவில் சுமந்து,கணவருக்கு நல்ல தாரமாய்,குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாய்,பெற்றவர்களுக்கு நல்ல் மகளாய்,புகுந்த வீட்டுக்கு நல்ல மருமகளாய் விளங்கிறார்கள்.
நம்மை பெற்றதாய் பெண்,நம்முடன் கூடபிறந்தவர்கள் பெண்,நமது துணவி பெண்,நமக்கு பிறந்த குழந்தையோ,பிறக்கபோகும் குழந்தையோ பெண்ணாக இருக்காலாம்.ஆதாலால் வாழ்வில் நம் கடந்து போகும் பாதையில்,தன் தாயிலிருந்து எத்தனையோ பெண்கலின் தோழமை நம் வாழ்வில் வழிகட்டுதலும்,உயர்வும் கிடைக்கிறது.பெண்மையை போற்றுவோம்,மதிப்போம்.
நவக்கிரகங்களை வழிபடுவது எப்படி?
--------------------------------------------------
மொத்தம் ஒன்பது முறை நவக்கிரகங்களைச் சுற்ற வேண்டும். ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏனெனில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே, இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே, கடைசி இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்றி வர வேண்டும்.

நவக்கிரங்களில் ஜாதகருக்கு சனி மட்டும்தான் அதிக தொல்லைகளை கொடுப்பவர்.மேலும் சனி மட்டும்தான் ஒரு ராசியில்,மற்ற கிரகங்களைவிட அதிக நாட்கள் இருப்பவர்.அத்னால் நவக்கிரங்களை சனிக்கிழமை வழிபடலாம்.நவக்கிரகங்களை வாரம் ஒருமுறை வழிப்பட்டால் போதும்

சனீஸ்வரனை நாம் நேரிடையாக பார்க்ககூடாது,இருந்தாலும் நவக்கிரங்களை சுற்றும்பொழுதோ அல்லது சனிக்கு அர்ச்சினை செய்யும்பொழுதோ,சனீஸ்வரன பார்க்காமல் இருக்க முடியாது,ஆதலால் நவக்கிரகங்களை வழிபட்டு முடித்தபிறகு,சனீஸ்வரனை நேரிடையாக பார்த்த் தோசம் நீங்க எள்ளும்,ந்ல்ல எண்ணெயில் விளக்கும் ஏற்ற வேண்டும்.
ஐயனாரும்,ஐயப்பனும் ஒன்றா?
------------------------------------------
ஐயனார் அல்லது அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
ஐயனார் வழிபாடு பிராமணிய இந்து சமய வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக பிராமணப் பூசாரிகள் ஐயனார் கோவில்களில் பூசைகள், சடங்குகள் செய்வதில்லை.
சிவனுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார்.
காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் ஐயனார் மாசி மாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார்
ஐயனாருக்குப் பூர்ணாதேவி, புஸ்கலாதேவி என இரண்டு தேவியர் உள்ளனர், ஐயனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர். பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஸ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர்.சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், ஐயனார் தனித்தும் இருக்கிறார். இவ்வாறாகத் தனித்து இருக்கும் ஐயனாரை பாலசாஸ்தா என்று அழைக்கின்றனர்.
ஐயனார் சைவ உணவு உண்பவர். சர்க்கரைப் பொங்கல் படைக்கப்படும். ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள். கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள்.
சிவபெருமானுக்கும் மோகினி (பெண்) வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் ஐயனாரும் ஐயப்பனும் ஒருவரே. இக்கருத்தானது, தனித்து இருக்கும் பாலசாஸ்தா என்ற ஐயனாருக்கும் ஐயப்பனுக்குமே பொருந்தும்.
ஐயனார் என்பவர் தெய்வம், மனித அவதாரம் எடுக்காதவர். ஆனால், ஐயப்பன் மனிதனாகப் பிறந்தவர். ஐயனார் கண்மாய்க்கரையில் தெய்வமாகப் பரமேசுவரன் மோகினியால் தோற்றுவிக்கப் பெற்றவர். ஆனால், ஐயப்பன் காட்டில் குழந்தையாகக் கண்டெடுக்கப் பெற்று அரசனால் வளர்க்கப் பெற்றவர். ஐயனார் ஒரு குடும்பஸ்தர். இரண்டு தேவியருடனும் பரிவார தெய்வங்களுடனும் உள்ளவர். ஆனால் ஐயப்பன் ஒரு யோகி. சீவசமாதியில் நித்தியயோகியாய் இன்றும் இருப்பவர்.
ஐயனார் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார்.
என்னை பொருத்த வரை இரண்டு தெய்வங்களுக்கும்,சற்றே வித்தியாசங்கள் இருந்தாலும்,இரண்டு தெய்வங்களால் கிடைக்கும் அருள் ஒன்றுதான்.
சிதம்பரம் நடராஜர் கோவில்;
-----------------------------------------
சிதம்பரம் நடராஜர் கோவில், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலும் பஞ்சபூதஸ்தலங்களுள் ஒன்று. இந்தக் கோவில் ஆகாயத்தை குறிக்கிறது. மொத்தக் கோவிலும் சிதம்பரத்தில் இருக்கும் தீட்சிதர்களால் நிருவகிக்கப்பட்டுவந்து தற்போது இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ளது. கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோவில் சிதம்பரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. 
இந்தக் கோவிலில் முக்கிய கடவுள்கள், நடராஜர் மற்றும் கோவிந்தராஜ பெருமாள். ஒரே கோவிலில் சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கு இருப்பது சிறப்பு. சிதம்பரம் என்னும் பெயர் சித்தம்பலம் எனும் பெயரில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னர் தில்லை என்றும் அழைக்கப்பட்டு வந்தது. 
இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த இடம் தில்லை என்று அழைக்கப்பட்டது. சித்தம்பலம் என்றால் சிவனின் ஆனந்த நடனம் நடந்த இடம் என்றும் கூறலாம். 

சிதம்பரம் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவள்ளித் தாயாரும் காட்சியளிக்கின்றனர். இதனால் இந்தத் தளம் தில்லை திருசித்திரக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. ஒரே கோவில் சிவனாலும், பெருமாளாளும் பெருமை அடைந்தது என்றால் அது சிதம்பரமே. 

இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு, சிவன் மற்ற கோவில்களை போல் லிங்க வடிவில் இல்லாமல் வேறு உருவமுடையவராக காட்சி தருகிறார். இங்கு காணப்படும் உருவம் சிவன் ஆடிய ஆட்டத்தின் ஒரு பாவம் என்று சொல்லலாம். இங்கு அவர் ஆனந்த தாண்டவம் ஆடியதாக கூறுவதும் உண்டு. பூதத்தை மிதித்துக்கொண்டு, கையில் தீயுடன், ஒரு கையையும், காலையும் தூக்கி, ஒரு கையில் மத்தளத்தை ஏந்தி, ஒரு வட்டத்துக்குள் காட்சியளிக்கிறார் நடராஜர்.

கோவிலுக்கு செல்ல மொத்தம் ஒன்பது வழிகள் உள்ளன, அவற்றில் நான்கு திசைகளிலும் ஏழு அடுக்குகளுடைய கோபுரம் உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு கோபுரங்கள் 160 அடி உயரம் கொண்டவை. இதில் கிழக்கு கோபுரத்தில் பரதநாட்டியத்தில் குறிப்பிடப்படும் 108 வகையான தோற்றங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதில் என்ன சிறப்பு என்றால் ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு மன்னனால் கட்டப்பட்டது. தெற்கு கோபுரம் பாண்டிய மன்னனாலும், மேற்கு கோபுரம் கிருஷ்ணதேவராயராலும், கிழக்கு கோபுரம் பல்லவன் இரண்டாம் கோப்பெருசிங்கனாலும், வடக்கு கோபுரம் முதலாம் சுந்தர பாண்டியனாலும் கட்டப்பட்டாதாகவும் வரலாற்றுச் சின்னங்கள் தெரியப்படுத்துகின்றன. 

மேலும் மேற்குக் கோபுரம் வழியாக திருநாவுக்கரசர், தெற்குக் கோபுரம் வழியாக திருஞானசம்பந்தர், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரர், கிழக்குக் கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும் வந்து சிவபெருமானை வழிபட்டுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது. இவர்கள் இந்தக் கோவிலின் உள்நுழைந்ததை குறிக்கும் வகையில் ஒவ்வொரு கோபுரத்திலும் அக்கோபுரத்தின் வழியாக வந்தவரின் படத்தைக் காணலாம்.


எல்லாவற்றிற்கும் மேல் சிதம்பரம் கோவிலில் முக்கியமானது சிதம்பர ரகசியம். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். 


இந்தக் கோவிலின் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், பஞ்சபூதஸ்தலங்களுள் காளஹஸ்தி, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. மற்ற இரண்டு தலங்களான திருவண்ணாமலையும், திருவானைக்காவலும் இந்த நேர்கோட்டில் இருந்து சற்றே விலகியுள்ளன.